Sunday, April 20, 2008

அமெரிக்க ஐ.டி. சந்தை 2008-ல் மந்தமடையும்

நடப்பு ஆண்டில் (2008) தகவல் தொழில்நுட்பத்திற்கான அமெரிக்க சந்தை மந்தமடையும் என்று ஆய்வு நிறுவனம் ஃபாரெஸ்டர் தெரிவித்துள்ளது.

அதாவது 2007-ம் ஆண்டில் இருந்த சந்தை 2008-ல் பாதியாகக் குறையும் என்று அந்த ஆய்வு கூறுகிறது. 2007-ல், 6 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம் 3 சதவீதமாகக் குறையும் என்று அது தெரிவித்துள்ளது.

2000-01-ம் ஆண்டு அமெரிக்காவில் இதைவிட பெரிய சரிவு நிலை ஏற்பட்டது நாம் அறிந்ததே. ஆனால் இந்த முறை அதுபோன்ற மந்த நிலை ஏற்பட சாத்தியமில்லை என்று ஃபாரெஸ்டர் சற்றே ஆறுதலாகக் கூறியுள்ளது.

2000-01-ம் ஆண்டு மந்த நிலை ஏற்பட்டபோது, கடந்த 50 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு தொழில் நுட்பக் கொள்முதல்கள் சரிவு கண்டது. அது போன்ற நிலை தற்போது ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் அமெரிக்க தொழில் நுட்பத் துறை தற்போது அடுத்த கட்ட வளர்ச்சிக்கான புதிய அணுகுமுறைகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதாவது 1991-ம் ஆண்டு இதே போன்ற பொருளாதார மந்த நிலை ஏற்பட்ட போதும், இதுபோன்ற ஒரு தொழில் நுட்ப புதிய வளர்ச்சித் திட்டங்களை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இதனால் இந்த சரிவு நிலை தற்காலிகமானதே என்று கூறுகிறார் ஃபாரெஸ்டர் தலைமை ஆய்வாளர் பார்டெல்ஸ்.

இந்த மந்த நிலையை கடந்து வந்து விட்டால் 2009-10ம் ஆண்டுகளில் பலமான முறையில் மீண்டெழும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

ஏனெனில் தொழில் நுட்ப தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான சந்தை 10 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க சந்தை ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்களாக ஃபாரெஸ்டர் குறிப்பிட்ட விஷயங்களில் கணினி மற்றும் தொடர்புச் சாதனங்களுக்கான சந்தை சரிந்து மீண்டும் வளர்ச்சியடையும் என்று கூறியுள்ளது.

2009ம் ஆண்டில் கணினி மற்றும் தொடர்பு சாதனங்களுக்கான சந்தை முறையே 14 மற்றும் 9 சதவீதமாக வளர்ச்சியடையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கைகள் ஒரு புறம் இருந்தாலும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்த மந்த நிலைக்கான வாய்ப்புகளையும் மறுக்காமல் புதிய சந்தைகளை உருவாக்கிக் கொள்வது நலம்.

வங்கி சேமிப்பு கணக்கு இனி குறைந்த பட்சம் 10,000

மும்பை:ஐ.சி.ஐ.சி.ஐ.,வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், குறைந்த பட்ச இருப்பு ரூ. 10 ஆயிரம் வைத்திருக்க வேண்டும்!சேமிப்பு கணக்கில் குறைந்த பட்ச இருப்பு இப்போது ரூ. 5,000 ஆக உள்ளது. இந்த குறைந்தபட்ச இருப்பு, வரும் ஜூலை மாதத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சம்பளக் கணக்கு, மூத்த குடிமகன், 'நோ ப்ரில்' கணக்கு ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. அவர்கள் இப்போதுள்ள குறைந்தபட்ச அளவை கையாளலாம். தனியார் வங்கிகளில், ஐ.சி.ஐ.சி.ஐ.,வங்கிக்கு போட்டியாக உள்ள எச்.டி.எப்.சி., வங்கியில் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு ரூ. 5,000 தான். அரசு துறை வங்கிகளில், இந்த தொகை 500 ரூபாய்.'இப்போது சேமிப்பு கணக்கு வைத்திருப் பவர்களில், 85 சதவீதம் பேர், 10 ஆயிரம் ரூபாய் இருப்பை பராமரிக் கின்றனர்; மீதமுள்ள வாடிக்கையாளர்கள் தான் அந்த நிலைக்கு வர வேண்டும்' என்று ஐ.சி.ஐ.சி.ஐ.,வங்கி அதிகாரிகள் கூறினர்.எப்போதும் இந்த குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. காலாண்டில் ஒரு முறை இந்த அளவை காட்ட வேண்டும்.'சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் களுக்கு சேவை செய்யும் போது, பல வகையில் செலவு அதிகமாகிறது. ஊழியர்கள் சம்பளம் உட்பட பல வகையில் செலவு அதிகமாவதால், குறைந்த பட்ச இருப்பை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது' என்றும் அதிகாரிகள் கூறினர்.