Sunday, April 20, 2008

வங்கி சேமிப்பு கணக்கு இனி குறைந்த பட்சம் 10,000

மும்பை:ஐ.சி.ஐ.சி.ஐ.,வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், குறைந்த பட்ச இருப்பு ரூ. 10 ஆயிரம் வைத்திருக்க வேண்டும்!சேமிப்பு கணக்கில் குறைந்த பட்ச இருப்பு இப்போது ரூ. 5,000 ஆக உள்ளது. இந்த குறைந்தபட்ச இருப்பு, வரும் ஜூலை மாதத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சம்பளக் கணக்கு, மூத்த குடிமகன், 'நோ ப்ரில்' கணக்கு ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. அவர்கள் இப்போதுள்ள குறைந்தபட்ச அளவை கையாளலாம். தனியார் வங்கிகளில், ஐ.சி.ஐ.சி.ஐ.,வங்கிக்கு போட்டியாக உள்ள எச்.டி.எப்.சி., வங்கியில் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு ரூ. 5,000 தான். அரசு துறை வங்கிகளில், இந்த தொகை 500 ரூபாய்.'இப்போது சேமிப்பு கணக்கு வைத்திருப் பவர்களில், 85 சதவீதம் பேர், 10 ஆயிரம் ரூபாய் இருப்பை பராமரிக் கின்றனர்; மீதமுள்ள வாடிக்கையாளர்கள் தான் அந்த நிலைக்கு வர வேண்டும்' என்று ஐ.சி.ஐ.சி.ஐ.,வங்கி அதிகாரிகள் கூறினர்.எப்போதும் இந்த குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. காலாண்டில் ஒரு முறை இந்த அளவை காட்ட வேண்டும்.'சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் களுக்கு சேவை செய்யும் போது, பல வகையில் செலவு அதிகமாகிறது. ஊழியர்கள் சம்பளம் உட்பட பல வகையில் செலவு அதிகமாவதால், குறைந்த பட்ச இருப்பை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது' என்றும் அதிகாரிகள் கூறினர்.

No comments: